Saturday, July 18, 2009

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள். எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். மேலும் பார்க்க...

No comments: