Friday, November 20, 2009

பென் டிரைவ் மூலம் கணினிக்கு வைரஸ் வராமல் தடுக்க .

நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் , இது இரண்டு வகைகளில் வருகிறது ,

1 ) internet மூலம்
2 ) pendrive மூலம்


இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் ,

Monday, September 7, 2009

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். மேலும் பார்க்க....

Short cut keys

நிரல்களை வேகமாக இயக்குவதற்க்கு நாம் குறுக்கு தட்டச்சு விசையை பயன்படுத்துவோம். இதனை பாவிப்பதால் எமக்கு இலகுவாக எமது வேலையினை செய்ய முடிகின்றது. அதனை பார்வையிட உங்களுக்கு ஒரு அருமையான இணையத்தளம் www.shortcutworld.com

PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பார்க்க.........

Sunday, August 2, 2009

பவர் சப்ளை (power supply unit)

கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது. SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. இந்த மின் இணைப்பான் இருவகைப்படும். மேலும் வாசிக்க......

Sunday, July 19, 2009

மைக்ரோசொப்ட் நிறுவனமும் பில் கேட் அவர்களும்...........

பில் கேட் [William Henry Bill Gates III]

என்றால் இன்று தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய,பிரசித்திப் பெற்றவர் வேறு யாரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருள் வல்லுனரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆகிய பில் கேட் அவர்களுக்கு தற்போது வயது 52 ஆகிறது. மேலும் வாசிக்க...

Bits & Bytes பற்றிய விளக்கம்.


கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள்அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல்கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும்இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆகஇருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும்குறிக்கப்படுகின்றன. மேலும் வாசிக்க....

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக Boot செய்யும் முறை

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக Boot செய்யும் முறை

எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகிஇயங்க ஆரம்பிக்கும்.
Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.
ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம். மேலும் வாசிக்க......

பாஸ்வர்ட் மறந்து போனால்..

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். Alt + Ctrl + Delete Keyயை press செய்து அதில் user nameஇல் Administrator என type செய்து ok செய்தல் வேண்டும். பின்பு control panel சென்று userஇயை click செய்து மற்றைய userகளின் passwordனை remove செய்யலாம். மேலும் வாசிக்க...

Live CD என்பதனை பற்றிய விளக்கம்

லைவ் சிடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக் கொண்ட ஒரு சிடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக் கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சிடி. மேலும் பார்க்க..

Firefox மொஸில்லா ரிப்ஸ்

பயர்பாக்ஸ் 3 பதிப்பு பெற்ற சாதனை விளம்பரத்திற்குப் பின் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்நமக்கு வரும் கடிதங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பல வாசகர்கள் இந்த பிரவுசருக்கான டிப்ஸ் மற்றும் ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் கேட்டு எழுதி உள்ளனர். ஏற்கனவே பல ஷார்ட் கட் கீகளுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து இவை தரப்படும். இதோ இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.1. தளங்களுக்கான தேடுதல் கீ வேர்ட் அமைத்தல்: பயர்பாக்ஸ் தொகுப்பில் புக் மார்க் செய்யப்பட்ட தளங்களில் தேடல் செயல்களை அந்த தளங்கள் சென்று தேடவேண்டியதில்லை.நீங்களே செட் செய்திடும் சில எழுத்துக்களை பயர்பாக்ஸ் லொகேஷன் பாரில் தந்து தேட வேண்டிய சொல்லையும் தந்தால் அந்த தளத்தின் தேடல் கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுவீர்கள்.மேலும் பார்க்க..

கணினி வலையமைப்பு

கணினி வலையமைப்பு (Computer network) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று தகவல் அல்லது தரவுகளைப்பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு அமைப்பு. கணினி வலையமைப்பை நிரந்தரமானது (வலையமைப்பு கம்பி இணைப்புகள்) அல்லது தற்காலிகமானது (மோடம் இணைப்புகள்) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.வலையமைப்பு வகைகள் வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி தனிநபர் பரப்பு வலையமைப்புகள் (Personal Area Networks or PAN) குறும்பரப்பு வலையமைப்புகள் (Local Area Network or LAN) பெரும்பரப்பு வலையமைப்புகள் (Wide Area Network or WAN) பெருநகர் பரப்பு வலையமைப்புகள் (Metropolitan Area Network or MAN) வலையமைப்பின் செயல்தன்மைப் படி வாடிக்கையாளர்-சேவையகம் (Client-Server) பல அடுக்குக் கட்டமைப்பு (Multitier architecture) வலையமைப்பு இணைப்பு முறைப் படி பாட்டை வலையமைப்பு (Bus Network) விண்மீன் வலையமைப்பு (Star Network) வளைய வலையமைப்பு (Ring Network) கண்ணி வலையமைப்பு (Mesh Network) விண்மீன்-பாட்டை வலையமைப்பு (Star-bus Network)...... மேலும் பார்க்க...

Saturday, July 18, 2009

பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு


கையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாகி வருகிறது. சென்ற இதழ்களில் பிளாஷ் டிரைவில் வைத்து எந்த கம்ப்யூட்டரிலும் இயக்கக் கூடிய சில தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அப்படியானால் இந்த பிளாஷ் டிரைவ்களிலும் ஆண்டி வைரஸ் தொகுப்புகளைப் பதிந்து வைத்து அதில் வைரஸ்கள் நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாமே என்று பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். இந்த எண்ணத்துடன் இணையத்தை தேடியபோது சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. மேலும் பார்க்க...

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள். எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். மேலும் பார்க்க...

கணினியின் வரலாறு

முதன்மைக் கட்டுரை: கணிப்பு வன்பொருட்களின் வரலாறு

ஆதியில் "கணிப்பான்" என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறிமுறை கணிப்பு சாதனங்களின் உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அன்டிகைதிரா எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதொவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது. மேலும் பார்க்க ....

எனது வவுனியா

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த வந்துள்ள உள்நாட்டு போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. மேலும் வாசிக்க...